Tuesday, December 27, 2005

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

Thursday, December 22, 2005

தேடல் ஏன ?

உண்மை உன்னிடம் இருந்தால், அதை
பரிந்துரைக்க ஏன் பலம் தேடுகிறாய்

உண்மை உன்னிடம் இருந்தால், அதை
கேட்பவனிடம் ஏன் குறை தேடுகிறாய்

Wednesday, December 21, 2005

நடுநிலை

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-திருவள்ளுவர்

Tuesday, December 20, 2005

killing me softly

as a sudden sense of sadness grew
i know i have not conquered
boredom

நினைவில் நின்றது

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்.

-நன்றி வைரமுத்து.

Thursday, December 15, 2005

முகவரி மாற்றம்

நான் இல்லாது போனாலும்
நாளை இல்லாமல் போகாது

நாள்-ஐ எதிர்பார்த்து நான் இல்லை
நாளை எதிர்கொள்வேன் என்ன விலை

இன்று ஆரம்பம் முடிவானது
முடிவு ஆரம்பமானது.

இன்று போல் நாளை இல்லாது போனாலும்
என்றும் போல் நால்வர் நில்லாது வருவார்கள்

Wednesday, December 14, 2005

மடியில் கனம், வழியில் பயம்

ஆசைக்கு ஒரு நகை வாங்கினேன்.
அணியும் பொழுது மகிழ்ச்சி.
அவிழ்க்க மனதே இல்லை.

அதில் அன்போடு மேலும் தங்கம் சேர்த்தேன்
மகிழ்ச்சியும் கூடியது மதிப்பும் கூடியது
அவிழ்க்க மனதே இல்லை.

மேலும் தங்கம் மேலும் மகிழ்ச்சி
நகையின் பாரம் அதிகம் ஆனது
அவிழ்க்க மனதே இல்லை.

நகையின் மதிப்பு அதிகம் கூடினாலும்
வீட்டில் அணிந்தால் உறுத்தல் தானே
அவிழ்க்க மனதே இல்லை.

வெளியில் செல்லும்பொழுது அணிந்தேன்
விலை அதிகம் ஆனதால் அபாயம்.
அவிழ்க்க மனதே இல்லை.

வீட்டில் பாரம், வெளியில் அபாயம்
அவிழ்க்க மனது இல்லை ஆனாலும்
பெட்டகத்தில் பூட்டினேன்.

பாரம் குறைந்ததில் நிம்மதி
அபாயம் குறைந்ததில் நிம்மதி
மகிழ்ச்சியோ பெட்டகத்தில்

மதிப்பு உயர்ந்த பொழுதில் மகிழ்ந்த நகை
பெட்டகத்தில் பூட்டப்பட்டதில் வருத்தம்
இது நகையின் குற்றம் இல்லை.

முன்பு பாரமும் இல்லை, அபாயமும் இல்லை
நகையும் இருந்தது, மகிழ்ச்சியும் இருந்தது.
பிறகு ஏன் அதிகம் ஆசைப்பட்டேன்?

நகையின் மதிப்பைக் குறைத்தேன்
மீண்டும் பழைய நகை, பழகிய பொலிவு
இனி பெட்டகம் தேவை இல்லை

இனி பாரம் இல்லை பயமும் இல்லை
மதிப்பு குறைந்ததில் வருத்தம்
வெகு நாட்கள் தொடராது

இன்று நகையும் உள்ளது மகிழ்ச்சியும் உள்ளது
விலை குறைந்தால் என்ன, உறுத்தல் இல்லையே
இனி அவிழ்க்க அவசியமும் இல்லையே

Monday, December 05, 2005

இனி நினைவும் கனவாகும்

ஒரு உலகம் இருக்கிறது
நான் நினைத்தபடி நடக்கிறது
ஆனால் அது பிடிக்கவில்லை
கனவு கலைவதில் வருத்தம்
நினைவுக்கு வந்த பின் இல்லை

Thursday, December 01, 2005

பக்கத்து செடிக்கு ரோஜாவின் அழைப்பு

மறுக்கப்படும் என்று தெரிந்தும்
செய்த மென்மையான முயற்சியில்
ரோஜாவிற்கு குளிர்கிறது
செடிக்கு வியர்க்கிறது